Paavakathaigal Movie Review Part 2
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi97UV6RQDau_0JDxWaFvGV26mIm581pX9Zlgo4tNnD3R65KKyDJRJuIp1ujS4JLDRyuqkQgb4v_cEEULrIVkYtPsj3F9t3I1giWpWZMB3fIFaMGQXG-pVFBts2sbl2HagYEknKY9x6wgdP/s320/20201219_125931.jpg)
பாவக்கதைகள் Part 2 சாதிவெறி மதவெறி உணர்வால் நடக்கிற கௌரவக் கொலைகளை பற்றிய படம். மொத்தம் நாலு படம் சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் கெளதம் வாசுதேவ மேனன் (இவரு மட்டும் மேனன்னு வச்சிப்பாரு) நாலு பேரு எடுத்திருக்காங்க. தமிழ்ல இப்பதான் இந்த மாறி நாலு பேரு சேர்ந்து படம் பண்ற மாறி Pattern வர ஆரம்பிச்சிருக்கு. 3.லவ் பண்ணா வுட்ரனும் படத்தின் Oneline சாதி உணர்வுக்கு கட்டுண்டு இருக்குற தன் தந்தையை ஜெயிக்கும் மகளின் கதை. விக்னேஷ் சிவன் இந்த படத்த எடுத்திருக்காரு, படத்தின் நாயகி அஞ்சலி அக்கா மற்றும் தங்கை என்ன இரு வேடத்தில் நடித்திருக்கிறார், ஒரு அஞ்சலி(தங்கை) கிராமத்துல அப்பாவோடு வாழ்கிறார், இன்னொரு அஞ்சலி(அக்கா) அப்பாவை ஏமாற்றுவிட்டு நகரத்திற்கு வந்து நினைத்தபடி சந்தோசமாக வாழ்கிறார். கிராமத்தில் இருக்கும் தங்கச்சி அஞ்சலி அவரோட வீட்டு Car Driver -அ லவ் பண்றாங்க, அத அவங்க அப்பா கிட்ட சொல்ல அப்பாவும் அத ஏத்துகிற மாறி நடிக்கிறார், இதுக்கு இடையில அஞ்சலி அப்பாவா சுத்தி எப்பவும் ஒரு சாதிவெறி கூட்டம் இருக்கு, அவங்க அஞ்சலி அப்பாவை எப்பவும் சாதி சொல்லி உசுப்பேத்திட்டே இருகாங...