Paavakathaigal Movie Review Part 1
பாவக்கதைகள்
சாதிவெறி மதவெறி உணர்வால் நடக்கிற கௌரவக் கொலைகளை பற்றிய படம்.
மொத்தம் நாலு படம் சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் கெளதம் வாசுதேவ மேனன் (இவரு மட்டும் மேனன்னு வச்சிப்பாரு) நாலு பேரு எடுத்திருக்காங்க. தமிழ்ல இப்பதான் இந்த மாறி நாலு பேரு சேர்ந்து படம் பண்ற மாறி Pattern வர ஆரம்பிச்சிருக்கு.
சரி ஒவ்வொரு படத்தையும் பத்தி விரிவாக பாத்துடலாம், எல்லாமே 30நிமிஷ படம்தான்.
1.தங்கம் (சுதா கொங்கரா )
படத்தின் oneline
திருநங்கைகளை சமூகம் நடத்தும் விதம் பற்றிய படம்.
படத்தின் நாயகன் காளிதாஸ்(நடிகர் ஜெயராம் மகன்) ஒரு திருநங்கை, இவருடைய நண்பர் சாந்தனு, சாந்தனு ஒரு இந்து குடும்பம், காளிதாஸ் ஒரு முஸ்லீம் குடும்பம்.
சாந்தனு காளிதாஸின் தங்கையை காதலிக்கிறார், காளிதாஸ் திருநங்கையாக மாறியதில் இருந்து சாந்தனுவை காதலிக்கிறார்.
திருநங்கைகள் இந்த சமூகத்துல என்ன என்ன கஷ்டப்படுவாங்களோ அதே கஷ்டம் காளிதாஸுக்கும் நடக்குது(நெறய படங்கள்ல பாத்ததுதான்).
திருநங்கைகளை பற்றிய கேலி கிண்டல்கள், பாலியல் கொடுமைகள் காளிதாஸுக்கும் நடக்குது, சாந்தனு அதலாம் கொஞ்சம் தட்டி கேக்குறார்.
காளிதாஸ் சாந்தனுவை காதலுடன் நேசிக்கிறார், சாந்தனு காளிதாஸை நட்புடன் நேசிக்கிறார், ஒரு கட்டத்தில் சாந்தனு நா உன் தங்கச்சிய love பண்ற என் love-க்கு நீ help பண்ணுனு காளிதாஸை கேக்குறாரு, உடனே காளிதாஸ் தன்னோட காதல வெளிப்படுத்த லூசுப்பயலே நீயும் நானும் friends-டானு சாந்தனு புரிய வைக்கிறார்.
அத புரிஞ்சிகிட்ட காளிதாஸ் சாந்தனு காதலுக்கு உதவுறாரு, இதுக்கு இடையில ரெண்டு வீட்லயும் சாதி, மத வெறிலாம் இருக்கு. காளிதாஸ சாந்தனுவ தவிர அந்த ஊர்ல வேற யாரும் ஒரு மனுசனா கூட ஏத்துக்க தயாரா இல்ல.
ஒரு கட்டத்துல இவங்க காதல் இவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கும் தெரிய வர, பெரிய பிரச்னை வரதுக்கு முன்னாடியே ரெண்டு பேரும் ஊர விட்டு ஓடி போறாங்க. இவங்க ஓடி போறதுக்கு காளிதாஸ் help பண்றாரு. கஷ்டப்பட்டு திருநங்கை operation-க்கு சேத்து வச்சிருந்த பணத்தையும் அவங்களுக்கு குடுத்து அனுப்புறாரு.
இவங்கள இப்டி அனுப்பிவச்சானால காளிதாஸ் என்ன கஷ்டப்பட்டாரு, அதுக்கப்பறம் என்ன ஆனாருன்றது தான் Climax.
படத்தை பற்றிய என் கருத்துக்கள் :
முதல்ல இந்த படத்துல எந்த கதாபாத்திரமும் சரியா Establish ஆகல, ரொம்ப normal ஆன கத மாறி இருக்கு, இந்த இந்து முஸ்லீம் மத சண்டைய பாக்குறப்ப பழைய தமிழ் படங்கள்தான் ஞாபகம் வருது. எவ்ளோ நல்ல படம் எடுத்தாலும் அதுல கொஞ்ச சுவாரசியத்தை வச்சாதான் நாம சொல்ல நினைக்கிற விஷயம் மக்களுக்கு போய் சேரும் இல்லனா அது waste தான், அந்த வகைல இந்த படத்துல சுவாரசியம் கொஞ்சம் missing.
காளிதாஸ் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு, மத்தபடி எதுவும் அவ்ளோ நல்லா இருக்குனு சொல்ல முடியல.
2.ஓர் இரவு (வெற்றி மாறன்)
படத்தின் oneline
அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்போராட்டமும், அப்பாவின் சாதி வெறியும்
அப்பாவாக பிரகாஷ்ராஜும் மகளாக சாய் பல்லவியும் நடித்திருக்கிறார்கள், பிரகாஷ்ராஜுக்கு 4பெண் குழந்தைகள் ஒரு பையன் இருக்கிறார்கள், சாய் பல்லவி இரண்டாவது பெண்.
பிரகாஷ்ராஜ் அந்த ஊரில் கொஞ்சம் பெரிய மனுஷன், கலப்பு திருமணம் பண்ற வீட்ல போய் செய்ய வேண்டியதை செஞ்சிட்டு வர்றவரு (இப்பதான் பெரிய மனுஷனு சொன்னீங்க)
சாய் பல்லவி தனக்கு பிடிச்ச ஒருத்தன கல்யாணம் பண்ணி நகரத்துல சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்காங்க, அவங்களுக்கு குழந்தை பொறக்க போகுதுனு தெரிஞ்சதும் அவங்க address விசாரிச்சு சாய் பல்லவி வீட்டுக்கு வராரு, சாய் பல்லவி நல்லா இருக்றதையும் அவ வீட்டுக்காரர் வேற ஜாதியா இருந்தாலும் அவள நல்லா பாத்துக்கறாருனு பிரகாஷ்ராஜுக்கு புரியுது.
இருந்தாலும் மருமகன்கிட்ட சாதி உணர்வால் இருக்குற குற்ற உணர்வு இருக்கத்தான் செய்யுது. சாய்பல்லவிக்கு எல்லா சொந்தக்காரங்க முன்னாடி வளைகாப்பு பண்ணனும்னு சொல்லி மகள கூட்டிட்டு போறாரு, மருமகன் தன்னோட குடும்பத்தோட பின்னாடி வரதா சொல்றாரு.
அதுக்கப்புறம் சாய்பல்லவிக்கு என்ன ஆச்சின்றது Climax.
படத்தை பற்றிய என் கருத்துக்கள் :
இந்த படமும் எனக்கு அழுத்தமா வந்து சேராத மாறித்தான் தோணுச்சு, படம் எப்படி முடியும்னு நமக்கு நல்லா தெரியும், so மத்த இடங்கள்ல காட்சிகளை கொஞ்சம் மாத்திருக்கலாம், எல்லா காட்சிகளும் எதிர்பாத்த மாறியே அமைஞ்சிட்டனால படம் திருப்தி இல்லாமதான் இருக்கு.
சாய்பல்லவி தமிழ் சுத்தமா புரிய மாட்டேங்குது, என்ன சொன்னாங்கனு கண்டுபிடிக்கிறதுக்குள்ள அடுத்த dialogues வந்துருது. பிரகாஷ்ராஜ் நல்லா நடிச்சிருக்காரு ஆனா வழக்கமா பல படங்கள்ல பாத்த அப்பாதான்.
சாய்பல்லவியோட climax நடிப்பு நம்மள கொஞ்சம் சோகத்துல ஆழ்த்துது, மத்தபடி ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
Dissappointment from வெற்றிமாறன் sir.
Also read : Soorarai Pottru Movie Review
கருத்துகள்
கருத்துரையிடுக