BEST FILMMAKING AND SCREENPLAY BOOKS Tamil
சிறந்த திரைக்கதை புத்தகங்கள்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பகுதியில் திரைக்கதை எழுதுவதற்கான சிறந்த பயிற்சி புத்தகங்களை பற்றி பார்க்க போகிறோம். அதுக்கு முன்னாடி படம் எடுக்கிறதுக்கு தேவையான எல்லா பயிற்சி விடீயோக்களும் நம்ம DIRECTION TAMIL Youtube Channel-ல இருக்கு மறக்காம பாருங்க.
1.திரைக்கதை எழுதலாம் வாங்க - கருந்தேள் ராஜேஷ்
திரைக்கதை எழுதறது பத்தி நல்ல தெரிஞ்சிக்கணும் ஏதாச்சும் ஒரு புக் சொல்லுங்க ப்ரோ அப்டினு கேட்டீங்கன்னா நா மொதல்ல இந்த புக்கதான் சொல்லுவ. அந்த அளவுக்கு திரைக்கதை பத்தி தெளிவா இந்த புக்ல சொல்லிருக்காங்க.
ஷிட்பீல்டு எழுதுன FOUNDATIONS OF SCREENWRITING புக்க தழுவித்தான் தமிழ்ல இந்த புக்க கருந்தேள் ராஜேஷ் அவர்கள் எழுதி இருக்காங்க.
ஒரு கதையிலிருந்து திரைக்கதை எவ்வாறு வேறுபடுகிறது?
ஒரு கதை என்பது வாக்கியங்களால் மட்டுமே நிறைந்தது, அனால் ஒரு திரைக்கதை என்பது காட்சிகள் வாயிலாக, வசனங்கள் வாயிலாக பார்வையாளனுக்கு எளிதில் புரியும் வகையில் ஒரு விறுவிறுப்பான கட்டமைப்புக்குள் வைக்கப்படும் அமைப்பாகும்.
இப்டி திரைக்கதைல இருந்து ஒரு படத்துக்கான SHOT-னா என்ன SCENE-னா என்ன SEQUENCEனா என்ன? ஒரு படத்துக்கான மணி நேரத்தையும் திரைக்கதை பக்கங்களையும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?, படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி உருவாக்க வேண்டும்?
ஒரு கதாபாத்திரத்தின் அக செயல்கள் என்றால் என்ன? புற செயல்கள் என்றால் என்ன? PROTOGAINIST(Hero) கதாபாத்திரத்தின் Charecter Arc எப்படி இருக்க வேண்டும், ANTOGAINIST(Villain) கதாபாத்திரத்தை எப்படி அமைக்க வேண்டும்,
ஒவ்வொரு காட்சியும் எவ்வாறு இருக்க வேண்டும் காட்சிகளின் கோர்வையை எவ்வாறு அமைக்க வேண்டும் அப்டினு ஒரு திரைக்கதையை எழுதுறத்துக்கு தேவையான எல்லா விளக்கங்களும் உங்களுக்கு புரியுற மாறி இந்த புக்ல குடுத்திருக்காங்க.
முக்கியமா ஒரு திரைக்கதையை எப்படி விறுவிறுப்பாக அமைக்க வேண்டும் என்பதை ரொம்ப தெளிவா நமக்கு சொல்லிருப்பாங்க. நமக்கு ரொம்ப Easy-ஆ புரியுற மாறி நெறய தமிழ் படங்களை வச்சி உதாரணம் காட்டிருக்காங்க. கூடுதலாக ஒரு நாவலை எப்படி படமாக்கணும்? ஒரு நாடகத்தை எப்படி திரைக்கதையாக்கணும்? வரலாற்று சம்பவங்களை எப்படி திரைக்கதையாக்கணும்னு? எல்லா தகவல்களும் இந்த புக்ல இருக்கு
திரைக்கதையை பத்தி அக்குவேறா ஆணிவேரா உங்களுக்கு தெரிஞ்சிக்கணும்னா கண்டிப்பா இந்த புக்க வாங்கி படிங்க.
Buy BOOK : https://amzn.to/3ex6OlL
BOOK Price : 271rs
2.திரைக்கதை எழுதுவது எப்படி - சுஜாதா
எனக்கு தெரிஞ்சி சுஜாதா அவர்களோட இந்த புக்கும் கருந்தேள் ராஜேஷ் அவர்களோட திரைக்கதை புக்கும் ஏறக்குறைய ஒண்ணுதான்.
அப்ப இந்த புக்கு எதுக்கு அந்த புக் மட்டும் போதும் அப்டினு நினைக்கலாம் ஆனா இந்த புக்கையும் நீங்க கண்டிப்பா படிக்கணும். ஏன்னா இந்த ரெண்டு புக்குமே எல்லா திரைக்கதை விளக்கங்களையும் வேற வேற Style-ல சொல்லிருக்காங்க.
முதல் புக்ல பாத்த இந்த புக்குலையும் திரைக்கதைபத்தின எல்லா விளக்கங்களும் இருக்கு . ஒரு பரீட்சை நாம எழுதுறோம் அப்டினா கேள்விக்கான பதில நாம தெளிவா எழுதுவோம். அப்டி நாம எழுதுன பதிலுக்கு முழு மதிப்பெண் கெடச்சிருமானு பாத்தா கெடைக்காது.
ஒவ்வொரு பதில்லையும் சரியான KEY POINTS வச்சி எழுதுனா மட்டுமே முழு மதிப்பெண் கெடைக்கும். அதே சமயம் வெறும் KEY POINTS மட்டும் எழுதி முழு பதில எழுதாம போனாலும் முழு மதிப்பெண் கெடைக்காது.
இந்த முழு பதில் & KEY POINTS இந்த ரெண்டும்தான் இந்த ரெண்டு புத்தகங்களும் கூட .
கருந்தேள் ராஜேஷ் அவர்களோட புத்தகம் ஒரு கேள்விக்கான முழு பதில் ....
சுஜாதா அவர்களோட புத்தகம் ஒரு பதிலின் KEY POINTS.
கண்டிப்பாக இந்த புத்தகத்தையும் வாங்கி படியுங்கள்.
Buy BOOK : https://amzn.to/3Be7aaI
BOOK Price : 150rs
3.வாங்க சினிமாவை பற்றி பேசலாம் இயக்குனர் பாக்கியராஜ்
இந்த புத்தகம் இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் திரைக்கதை அனுபங்களை பற்றியது
முதல் இரண்டு புத்தகத்திலிருந்து இந்த புத்தகம் முற்றிலும் வேறுபட்டது. இந்த புக்ல எனக்கு ரொம்ப புடிச்ச POINT எவ்ளோ பெரிய கதையா இருந்தாலும் திரைக்கதையா இருந்தாலும் எல்லாமே SENTIMENT- அ சுத்திதான் நகருது, SENTIMENT-தான் ஒரு படத்தின் ஆதாரப்புள்ளியே .
இத மாறி நெறய KEY POINTS இந்தபுக்ல இருக்கு.
திரைக்கதைகளை அனுபவங்கள் மூலமாக தெரிஞ்சிக்கணும்னா கண்டிப்பா இந்த புத்தகம் படிங்க.
Buy BOOK : https://amzn.to/3ijnVc4
BOOK Price : 100rs
4.தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம் - ஸ்டாலின் ராஜாங்கம்
இந்த புத்தகம் சினிமாவின் இந்த புத்தகம் சினிமாவின் அரசியலை சாதி பற்றி தெளிவாக விளக்குகிறது அரசியலை பற்றி தெளிவாக விளக்குகிறது.
பாரம்பரியமிக்க தமிழ் சினிமாவில் சாதி எவ்வாறு ஒவ்வொரு படங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது, மிக முக்கியமாக ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான இந்த சினிமா பார்வை எப்படி இருந்துள்ளது என்பதை பற்றி இந்த புத்தகம் தெளிவாக விளக்குகிறது.
நீங்கள் ஒரு சமூக அக்கறை உள்ள இயக்குனராக விரும்பினால் கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
Buy BOOK :https://amzn.to/3hLKSFC
BOOK Price : 145rs
எனக்கு தெரிஞ்சி இந்த நாலு புக்க படிச்சாலே உங்களுக்கு திரைக்கதை பத்தின தெளிவான பார்வை கெடச்சிடும். இல்ல இது போக இன்னும் ஏதாச்சும் புக் இருந்தா சொல்லு அப்டினு கேக்றவங்களுக்கு கீழ இன்னும் கொஞ்சம் புக்ஸ் குடுக்குற
முக்கியமான விஷயம் நா குடுத்திருக்குற இந்த புக்ஸ் எல்லாத்தையும் நா PERSONNAL-ஆ படிச்சிருக்க.
என்னோட அனுபவத்துலதான் இந்த புக்ஸ வரிசைப்படுத்தி உங்களுக்கு குடுத்திருக்க.
கருத்துகள்
கருத்துரையிடுக