Paavakathaigal Movie Review Part 2
பாவக்கதைகள் Part 2
சாதிவெறி மதவெறி உணர்வால் நடக்கிற கௌரவக் கொலைகளை பற்றிய படம்.
மொத்தம் நாலு படம் சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் கெளதம் வாசுதேவ மேனன் (இவரு மட்டும் மேனன்னு வச்சிப்பாரு) நாலு பேரு எடுத்திருக்காங்க. தமிழ்ல இப்பதான் இந்த மாறி நாலு பேரு சேர்ந்து படம் பண்ற மாறி Pattern வர ஆரம்பிச்சிருக்கு.
3.லவ் பண்ணா வுட்ரனும்
படத்தின் Oneline
சாதி உணர்வுக்கு கட்டுண்டு இருக்குற தன் தந்தையை ஜெயிக்கும் மகளின் கதை.
விக்னேஷ் சிவன் இந்த படத்த எடுத்திருக்காரு, படத்தின் நாயகி அஞ்சலி அக்கா மற்றும் தங்கை என்ன இரு வேடத்தில் நடித்திருக்கிறார், ஒரு அஞ்சலி(தங்கை) கிராமத்துல அப்பாவோடு வாழ்கிறார், இன்னொரு அஞ்சலி(அக்கா) அப்பாவை ஏமாற்றுவிட்டு நகரத்திற்கு வந்து நினைத்தபடி சந்தோசமாக வாழ்கிறார்.
கிராமத்தில் இருக்கும் தங்கச்சி அஞ்சலி அவரோட வீட்டு Car Driver -அ லவ் பண்றாங்க, அத அவங்க அப்பா கிட்ட சொல்ல அப்பாவும் அத ஏத்துகிற மாறி நடிக்கிறார், இதுக்கு இடையில அஞ்சலி அப்பாவா சுத்தி எப்பவும் ஒரு சாதிவெறி கூட்டம் இருக்கு, அவங்க அஞ்சலி அப்பாவை எப்பவும் சாதி சொல்லி உசுப்பேத்திட்டே இருகாங்க.
நீங்க நினைக்கிற மாறி இந்த சாதிவெறி கும்பல் அவ்ளோ serious ஆனா கும்பல்லாம் கெடயாது, சரியான comedy gang மாறி விக்னேஷ் சிவன் set பண்ணிருப்பாரு, ஆனா அப்பா கொஞ்சம் Terror தான்.
இந்த தங்கச்சி அஞ்சலி அக்கா அஞ்சலிக்கு phone பண்ணி அப்பா முன்ன மாறி இல்ல இப்ப நல்லா மாறிட்டாரு என்னோட காதலுக்கு ok சொல்லிட்டாரு, அதனால நீயும் உன் காதல பத்தி அப்பாகிட்ட சொல்லுன்னு கூப்பிட்றாங்க. இந்த நகரத்து அஞ்சலியும் அத நம்பி கிராமத்துக்கு கெளம்பி வராங்க.
இவங்க ஊருக்கு வரதுக்குள்ள, தங்கச்சி அஞ்சலி காதலுக்கு ஒத்துக்கிட்ட மாறி நடிச்ச அப்பா அவள தண்ணில Shock வச்சி சாகடிக்கிறாரு, இந்த நகரத்து அஞ்சலி கூட ஒரு வெளிநாட்டு பொண்ணும் ஒரு பையனும் ஊருக்கு வராங்க.
அந்த வெளிநாட்டு பொண்ணுக்கு நல்லா தமிழ் தெரியும், அந்த பொண்ணுக்கு ஏதும் தெரியாதுன்னு இந்த கொலைகார கும்பல் எல்லாத்தையும் open ஆ பேசுறானுங்க, இந்த விஷயம் எல்லாமே அக்கா அஞ்சலிக்கு தெரிய வர அவங்க அப்பாகிட்ட இருந்து எப்படி தப்பிச்சாங்கன்றதுதான் Climax.
படத்தை பற்றிய என் கருத்துக்கள் :
நான் பாத்த நாலு படத்தலயும் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இதுதான், என்ன மத்த 3 படமும் நெறய தமிழ் படங்கள்ல ஏற்கனவே பாத்ததுதான். ஆனா இந்த படம் கொஞ்சம் நக்கலா சாதி வெறி பிடிச்சவங்கள கலாய்ச்சிருப்பாங்க. அந்த சாதி வெறி கூட்டத்தை நரின்னுதான் விக்னேஷ் சிவன் நமக்கு அறிமுகப்படுத்துவாரு.
அந்த கூட்டத்துக்கு குள்ளமா இருக்குற ஒருத்தர வில்லனா போட்டு விக்னேஷ் சிவன் வச்சி செஞ்சிருக்காரு, பெரிய பெரிய இயக்குனர்கள் இந்த 4படங்கள்ல இருந்தாலும் என்ன பொறுத்தவரைக்கும் இதுல ஜெயிச்சது விக்னேஷ் சிவன்தான். நாம என்ன வேணா எப்படி வேணாலும் கருத்து சொல்லலாம் ஆனா அது பாக்கிற மக்களுக்கு போய் சேரனும். அங்கதான் ஒரு இயக்குநரோட வெற்றியே இருக்கு.
இவ்ளோ காமெடியா சாதிவெறி கும்பல வச்சி செஞ்ச படம் இதுதான்.
Unexpected Visual Treat From Vigneh Sivan.
4.வான்மகள்
படத்தின் Oneline
பாலியல் கொடுமை படுத்தப்பட்ட சிறு வயது மகளுக்கும் பெற்றோருக்குமான உணர்வு போராட்டம்.
கெளதம் வாசுதேவ் மேனனுக்கு 3குழந்தைகள், ஒரு பையன் இரண்டு பெண் குழந்தைகள் மனைவி சிம்ரன். கவுதம் வாரணம் ஆயிரம் அப்பா போலவே வலம் வருகிறார். குடும்பம் சந்தோசமா போய்ட்டு இருக்குற மாறி கதை நகர்கிறது, கவுதமின் முதல் பெண் குழந்தை பெரிய பெண் ஆகிறாள்.
சிம்ரன் அந்த குழந்தைக்கு தேவையான அறிவுரை எல்லாம் சொல்ராங்க, படம் சந்தோசமா மறுபடியும் நகர்கிறது, திடிர்னு ஒரு நாள் ரெண்டாவது பெண் குழந்தையை இந்த பையனின் college பசங்க சில பேர் கடத்தி பாலியல் கொடுமை பண்ணிடறானுங்க.
இதுக்கப்புறம் அந்த குடும்பம் பெரிய குழப்பத்துக்கு உள்ளாகுது,அக்கம் பக்கத்துல வேற இந்த குழந்தையை பத்தின செய்திய பேச ஆரம்பிக்கறாங்க, இதல்லாம் இவங்களுக்கு பெரிய மன உளைச்சல தருது, இவங்களே அத மறக்க நெனச்சாலும் பக்கத்துல இருக்கிறவங்க சொந்தகாரங்க குடுக்குற தொல்லைகள் ரொம்ப கஷ்டத்தை குடுக்குது. இதுக்கு இடைல அந்த பையன் தப்பு பண்ண பையன கண்டுபிடுச்சி தண்டனை குடுக்குறான்.
இப்ப பெரிய மன உளைச்சல்ல இருக்குற சிம்ரன் தன் குழந்தைய என்ன பண்றாங்கண்றதுதான் Climax.
படத்தை பற்றிய என் கருத்துக்கள் :
இந்த படமும் ரொம்ப எதிர்பார்த்த மாறியே காட்சிகள் இருக்கு. யதார்த்தம் நெறய missing ரொம்ப நாடகத்தன்மையோட இருக்கு, screenplay work பண்ண மாறியே தோணல, இருந்தாலும் படம் ஒரு Positive ஆனா முடிவ நோக்கி நம்மள நகர வைக்குது.
Also Read : Paavakathaigal Part 1
கருத்துகள்
கருத்துரையிடுக