VAAZHL Movie Review By DIRECTION TAMIL
வாழ்
படத்தின் oneline :
"நாளைக்கு என்பது நாளைக்குதான்"
"நாம வாழ்க்கைல சந்திக்கிற மனிதர்கள் நம்ம வாழ்க்கைய மாத்துற சக்தி படைச்சவங்க"
இந்த ரெண்டு வாக்கியம் தான் இந்த படத்தோட Oneline, Theme எல்லாமே
படத்தின் கதை விளக்கம் :
இதுல நாளைக்கின்றது நாளைக்கு தான் அப்படின்னு நாம சிம்பிளா சொல்லிட்டோம் இல்லையா, ஆனா அந்த Line ஓட மொத்த உள் அர்த்தத்தையும் படம் தெளிவா விளக்குது.
நாம எல்லாருமே நாளைக்கு என்ன பண்ணலாம், நாளைக்கு எப்படி சந்தோசமா இருக்கலாம், நாளைக்கு ஏதாச்சும் நடந்துருமோனு நாளைக்கான வாழ்க்கையை மட்டுமே யோசிக்கிறோமே தவிர இன்னைக்கான வாழ்க்கைய வாழ்றது இல்ல.
நாளைக்கின்றத மறந்துட்டு இன்னைக்கான வாழ்க்கையை சந்தோசமா வாழணும்னு படம் சொல்லுது. அதுமட்டுமில்லாம நம்ம வாழ்க்கைல நாம சந்திக்கிற மனிதர்கள் நம்ம வாழ்க்கையை மதுரை சக்தி படைச்சவங்கனு முன்னாடி பாத்தோம்ல அதையும் ரொம்ப Detail-ஆ படம் சொல்லுது.
நாம ஒவ்வொரு மனிதனையும் சந்திக்கிறோம் இல்லையா இந்த சந்திப்புக்கு இடையில நெறய TRAVEL இருக்கு இந்த TRAVEL எப்பவுமே நமக்கு நெறய Maturity-அ குடுக்கும்.
ஆமா Maturity-க்கும் பயணத்துக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு மனுஷன் நெறய இடத்துக்கு பயணப்படும் போதுதான் நெறய மனப்பக்குவத்தை அடைகிறான், அவன் சந்திக்கிற வெவ்வேறு மனிதர்கள்,வெவேறு நிலபரப்புகள், வெவ்வேறு பண்பாடு, கலாச்சாரங்கள் அவனுடைய எண்ணங்களை விசாலமாக்கி அவனுடைய அணுகுமுறையை செம்மைப்படுத்துகின்றன.
ஏன்டா கொழப்புறனு கேக்காதீங்க Simple-ஆ சொல்லனும்னா SPORTS PLAYERS-அ பாருங்க ஒரு 18 வயசு SPORTS PLAYER-க்கு இருக்குற Maturity நமக்கு 25 வயசானாலும் வராது. ஏன்னா அந்த வயசிலே அவன் நெறய TRAVEL பண்ணிட்டான் நம்மள விட நெறய மனிதர்களை அவன் பாத்துட்டான்.
பயணங்களுக்கு மனபக்குவத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குனு இந்த படம் நமக்கு சொல்லுது .
இந்த படத்துல நாயகன் இரண்டு மனிதர்களை (பெண்கள்) சந்திக்கிறான். இந்த ரெண்டு பேரும் நாயகனை நெறய பயணப்பட வைக்கிறாங்க இந்த ரெண்டு பேரும் அவனுக்கு இந்த வாழ்க்கையை வாழ்றத பத்தின வேற ஒரு புரிதலை குடுக்குறாங்க.
ஒவ்வொரு இடத்துக்கு போறப்பவும் அந்த HERO வாழ்க்கைய பத்தி பயந்துட்டே இருப்பார். ஆனால் அந்த HERO கூட ஒரு 10 வயசு குழந்தையும் பயணப்படும்.
அந்த குழந்தை எந்த எடத்தையும் பாத்து பயப்படாது. ஒவ்வொரு இடத்தையும், அங்க இருக்குற மனிதர்கள் கூடவும் ரொம்ப சந்தோசமா இருக்கும்.
படத்தோட ஆழமான அர்த்தத்தை Smple-ஆ ஒரு குழந்தைய வச்சி நமக்கு இத புரிய வச்சிருப்பாரு DIRECTOR.
உண்மையிலே நாமளும் இப்படித்தான் நாம குழந்தையா இருக்கிறப்ப மட்டும்தான் இந்த வாழ்க்கையை சரியா வாழுறோம். அதுக்கு அப்புறம் நாம நமக்கான கட்டமைப்புக்களை உருவாக்கி வச்சிக்கிறோம் இதுக்கான அடிப்படை காரணம் SURVIVAL.
இந்த SURVIVAL தான் ஆசை, சுயநலம், பாதுகாப்பு, இது எல்லாத்தையும் தேவையாக்குது. இதனால்தான் நாம கட்டமைப்புக்குள்ள நகர்றோம். நான்,என் வீடு,என் அம்மா,என் அப்பா,என் அக்கா,என் தம்பி,என் தெரு,என் ஊரு,என் நாடு, என் நாகரிகம்,என் பண்பாடு இப்படின்ற வட்டத்துக்குள்ள நாம போய்ட்றோம்.
ஆனா உண்மையில வாழ்க்கை இப்டி கெடயாது இந்த வட்டத்த நாம உருவாக்கலனா நாம வாழ்க்கைய வேற மாறி வாழ்ந்திருப்போம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நாளைய நெனச்சி பயப்படாம இன்னைக்கான வாழ்க்கைய இந்த நொடிய நாம சந்தோசமா உணர்ந்து அனுபவிச்சி வாழ்ந்திருப்போம் அந்த குழந்தையை மாதிரி.
வாழ்க்கைய வாழ்தலை பற்றிய வேற ஒரு பார்வையை இந்த படம் குடுக்குது.
படத்தை பற்றிய என் கருத்துக்கள் :
படம் ஆரம்பத்துல போரடிச்சாலும் கதைக்குள்ள வந்ததுக்கு அப்பறம் ரொம்ப இருக்கு நல்லா எனக்கு இந்த படமே ஒரு TRAVEL பண்ண மாறிதான் இருந்துச்சி. சாதாரண TRAVEL இல்ல ஒரு ஜன்னலோர பயணம் மாறி இதமா இருந்துச்சி.
அப்புறம் படத்தோட VISUALS,MUSIC-லாம் வேற LEVEL-ல இருக்கு.
படம் SONY LIV OTT-ல வெளியாயிருக்கு கண்டிப்பா படம் பாருங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக