SOORARAI POTTRU Movie Tamil Review

 சூரரைப் போற்று ஒரு பார்வை 



Movie One line

எளிய மக்களுக்கும் விமான சேவை கிடைக்க வேண்டுமென பாடுபடும் நாயகனின் கதை 

Hero சூர்யாவின் அப்பா ஒரு வாத்தியார், நேர்மையான அகிம்சை முறையில் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம் என நம்புவர். மகன் சூர்யா அப்படியே எதிற்மறையானவர் இந்த முரண் தான் கதையின் மையக்கரு. 

இதனால் இருவருக்கும் ஏற்படும் பிளவுதான் கதையை முதல்பாதி வரையில் வேகமா நகர்த்துகிறது. பிறகு சூர்யா விமானப்படையில் பணிபுரிந்து வருகிறார் அவருடைய முரட்டு குணத்தால் உயர் அதிகாரியிடம் பல கிலோமீட்டர் ஓடுவது,சுமைகளை தலையில் தூக்குவது  என பல punishment க்கு உள்ளாகிறார். 

இடையிடையே அவருக்கும் அவர் அப்பாவுக்குமான சொல்ல படாத பாசம் நம் கண்ணில் வந்து போகிறது. இவர் விமானப்படையில் பணிபுரிய அப்பா ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார், எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென விமான நிலையத்திற்கு விரைகிறார். அங்கே Ticket க்கு போதுமான பணம் இல்லாததால் மிகுந்த துயருக்கு உள்ளாகிறார். 

அதுதான் கதை கருவுக்கான காட்சி, அந்த காட்சியில் சூர்யாவின் நடிப்பு பிரமாதம்.அந்த நொடிகள்தான் சூர்யாவை ஒரு பெரிய முயற்சியை எடுக்க தூண்டுகிறது. பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிற இந்த சேவை அணைத்து மக்களுக்கும் கம்மியான விலையில் கிடைக்க வேண்டுமென முடிவு செய்கிறார். 

சொந்த விமான கம்பெனி தொடங்குவதற்கான வழி இருப்பதை கண்டறிகிறார். ஆனால் அதையும் செயல்படுத்த ஒரு அளவுக்கு பணம் தேவைபடுகிறது, ஊர்மக்கள் மனைவி அம்மா என உற்றார்கள் உதவி செய்தாலும் அது போதுமானது அன்று என நமக்கே தெரியும். 

இதைபோன்றே விமான கம்பெனி வைத்திருப்பவர்களின் உதவியை நாடுகிறார், இவருடைய Idea நன்றாக இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் இருந்தாலும் அது சாத்தியமானதாகவே இருந்தாலும் இந்த விமான சேவை எளிய மக்களுக்கும் கிடைத்து விடும் என்கிற ஒரே காரணத்தால் நாயகன் பலவாறு அலைக்கழிக்கபடுகிறார்.

ஏற்கனவே விமான துறையில் இருக்கும் பேரும் முதலாளிகள் இவருக்கு குடுக்கும் சிக்லல்களுக்கு அளவே இல்லை, அதையும் தாண்டி நாயகன் எப்படி ஜெயித்தார் என்பதுதான் மீதிக்கதை. படம் முழுக்க சூர்யாவின் மனைவி அவருக்கு பக்கபலமாக அவருக்கு உதவுகிறார். 



ஏன்டா டேய் இதான உன் Review நல்லா வருவடா நீனு  நெனைக்காதிங்க இது கத புரியருதுக்காக சொன்னேன். முதல்ல இந்த கத எப்படி எடுபடும்னு நெனச்ச(நானும் ஒரு Aeronautical Engineer) ஏன்னா GR GOPNATH ஓட வாழ்க்கை வரலாறுதான் இந்த படம். அவோரோட கதைய அப்டியே எடுத்திருந்தா கண்டிப்பா படம் எடுபடாது, அவரோட வாழ்க்கைல நடந்த முக்கியமான சம்பவங்களை எடுத்து நெறய மாற்றங்கள் பண்ணி திரைக்கதைய பண்ணிருக்காங்க மல்லையா விஷயமும் சேத்து. 

நாம ஏற்கனவே கதை வேறு திரைக்கதை வேறனு சொல்லிருக்கோம், இவங்க பண்ண முக்கியமான விஷயம் சூர்யா ஓட அப்பா கதாபாத்திரத்த மாத்துனதுதான், அவங்களுக்கு இடையில இருந்த பாசம்தான் இந்த கதையை நம்ப வைக்குது, நம்மளால அந்த கதையோட travel பண்ண முடியுது  இல்லனா இந்த aeroplane கதைய எப்படி நல்லா எடுத்திருந்தாலும் மக்களுக்கு அந்த connect இருந்திருக்காது. 

So டைரக்டர் திரைக்கதையில முக்கியமா பண்ண வேண்டியதை சரியா பண்ணிட்டாங்க, GR Gopinath ஓட அப்பா வாத்தியார் கெடயாது, அவருக்கும் அவங்க அப்பாவுக்கும் இந்த சண்டையும் கெடயாது, தவிர Gopinath க்கு விமான கம்பெனி ஆரம்பிச்சி சேவை பண்ணனும்னு பெரிய ஆசையும் கெடயாது, அவரு விமானப்படையில் இருந்து வந்ததுக்கப்புறம் நெறய Bussiness பண்ணிருக்காரு அதோட தொடர்ச்சியாக விமான கம்பெனியும் ஆரம்பிச்சருக்காரு. 

அதுமட்டும் இல்லாம கம்மியான விலையில Ticket கொடுக்கணும்னு நெனச்சது அவரோட Bussiness யுக்தி தான் முழுசா சேவைன்னு சொல்லிட முடியாது, இப்ப திரைக்கதை எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிற. ஒரு நாவலையோ , ஒரு வாழ்கை வரலாறையோ படமா மாத்துறப்போ இந்த மாற்றங்களை சரியா பண்ணியாகணும், அந்த வகையில டைரக்டர் ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க. 

படத்தோட Dialogues படத்துக்கு முக்கிய பலமா இருக்கு "100வருஷத்துக்கு முன்னாடி electricity தேவல்லனு சொன்னாங்க, 50வருஷத்துக்கு முன்னாடி கார் தேவல்லனு சொன்னாங்க, ஆனா சொன்னவன் பூரா அத அனுபவிக்கிறவனு சொன்ன dialogue என்ன இந்த படத்துக்குள்ள வேகமா இழுத்துச்சி, Train ல ஒரு ஐயர் சீட் (10%இட ஒதுக்கீடு) பத்தி பேசுறதுனு படம் நெறய இடங்கள்ல கம்யூனிசம் பேசுது. 



படத்துல நடிச்ச எல்லாரோட நடிப்பும் நல்லா இருந்துச்சி, அந்த நாயகியோட Reference டைரக்டர் மாறியே இருந்துச்சி,பாட்டும் நல்லா இருந்திச்சி, விறுவிறுப்பான திரைக்கதைதான் படத்தோட தூண்ணு சொல்லலாம். 


எல்லாத்தையும் தாண்டி ஒரு படம் மக்களுக்கு எடுக்கிறோமா இல்ல Bussinessகு எடுக்குறோமன்றது முக்கியம், இந்த படம் ரெண்டையுமே சரியா பண்ணிடுச்சி. (Producer உம் பாவம் இல்லையா)

படம் பாக்கலனா உடனே பாருங்க 

அடுத்த படத்துல பாப்போம்.... 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

BEST FILMMAKING AND SCREENPLAY BOOKS Tamil

Paavakathaigal Movie Review Part 1

VAAZHL Movie Review By DIRECTION TAMIL

MOOKUTHI AMMAN Movie Tamil Review