MOOKUTHI AMMAN Movie Tamil Review

 மூக்குத்தி அம்மன் 



Movie Oneline

போலிச்சாமியார்களை துகிலுரிக்க முயற்சி செய்யும் கதை. 

திரைக்கதை 

News Reporter ஆக வரும் படத்தின் நாயகன் RJ பாலாஜி சாதாரண நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் ஒருவர். அவருக்கு மூன்று தங்கைகள், முதல் சகோதரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வீட்டில் இருப்பவர் இரண்டாவது தங்கை விமான பணிப்பெண் வேலைக்கு படிப்பவர் மூன்றாவது தங்கை school சென்று கொண்டிருப்பவர். 

அம்மா மற்றும் தாத்தா(அப்பாவோட) உடன் வசிக்கிறார்கள் . அவரின் அப்பா சிறுவயதிலே குடும்பத்தை விட்டு ஓடி விடுகிறார். RJ பாலாஜியின் அம்மா ஊர்வசிக்கு அதி மூடத்தனமான தெய்வ பக்தி, கோயில்களுக்கு செல்ல குழந்தைகளிடம் ஊர்வசி சொல்லும் காரணங்களே அவரின் மூடத்தனத்தை சொல்கிறது. 

சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளையும்  படம் காட்டுகிறது. அம்மா அப்பாவ பாத்து ஏன் இத்தன பிள்ள பெத்திங்க, எதுக்கு இவ்ளோ வருஷம் கழிச்சும் பிள்ள பெத்திங்கனு அவ்ளோ சாதாரணமா மஅப்பா அம்மாவ பாத்து நாம கேக்குற கேள்விகள் அவங்கள எவ்ளோ காயப்படுத்தும், அதுக்கான காரணம் என்னனு நமக்கு தெரிய வரப்ப நமக்குள்ள ஒரு பெரிய குற்ற உணர்ச்சிய ஏற்படுத்தி, இந்த கேள்விய கேட்டதுக்காக நம்மள நாமளே செருப்பால அடிக்கணும்னு தோண வைக்குது. 

இன்னும் சில நாம சந்திக்கிற குடும்ப பிரச்சனைகளை படம் பேசி வேற ஒரு பொதுப்பிரச்னைக்கு படம் நகர்கிறது. ஊர்வசி ஓட வற்புறுத்தல்னால எல்லாரும் குல தெய்வ கோயிலுக்கு போறாங்க, அங்க RJ பாலாஜி முன்னாடி அம்மன்(குலதெய்வம் மூக்குத்தி அம்மன்) வந்து 



அம்மனோட அந்த கோயிலை உலகத்துக்கே தெரியுற மாறி Famous ஆக்கணும்னு ஒரு தேவையை நிறைவேத்தி வைக்க சொல்லுது.இவரும் அதுக்காக நெறய முயற்சிகள் செய்யுறாரு இந்த காட்சியெல்லாம் நமக்கு Comedy கலந்து காட்றாங்க, அம்மன்(நயன்தாரா) நெனச்ச மாறியே கோயில் இப்ப நல்லா Popular ஆயிடுது.

இந்த வேலையிலதான் ஒரு போலிச்சாமியார் நான்தான் சாமின்னு சொல்லி அந்த கோயில் இருந்த மொத்த காட்டையும் ஆக்கிரமிக்க முயற்சி பண்றான். RJ பாலாஜி ஓட அப்பாவும் அந்த சாமியார் கிட்டாதான் சந்நியாசியா போய் சேர்ந்து இருக்காருன்னு தெரியுது.

இதுக்கப்புறம் RJ பாலாஜியும் அவரோட குடும்பமும் சேர்ந்து எப்படி அந்த சாமியார் போலிச்சாமியார்னு மக்களுக்கு அடையாளம் காட்றாங்கன்றதுதான் மீதிக்கதை. 



படத்தை பற்றிய என் கருத்துக்கள் :

முதல்ல இந்த படத்துல கதைனு ஒன்னும் illa,  Current Affairs பாக்குற மாறி இருந்துச்சி. அப்பறம் Film Language சுத்தமா follow பண்ணாத படம்தான். (Film Language பத்தி பின்னாடி பாப்போம்), RJ பாலாஜி என்னலாம் Mike ல பேசுவாரோ அத Video வா பாத்த மாறிதான் இருக்கு.

ஒரு சில காட்சிகள் மனசுல நிக்குதே தவிர படம் முழுக்க மிகைப்படுத்தப்பட்ட  காட்சிகள்தான் நெறய இருக்கு. அப்புறம் படம் யார போலிச்சாமியார்னு காட்டுதுனு நமக்கே தெரியும், நயன்தாராவுக்கு பெரிய நடிப்பு ஒன்னும் இல்லை.

படத்த முழுசா தாங்கி நிக்குறது ஊர்வசி அவங்க மட்டும்தான். அவங்களோட நடிப்பு அனுபவம் நமக்கு நல்லா தெரியுது. அவங்க Dialogues Delivery ரொம்ப பிரமாதம். வேற யாருக்கும் பெரிய நடிப்பு இல்ல.

தவிர வில்லன் ரொம்ப over acting, இதுல பண்ற performance ல நெறய chances வரணும்னு நெனச்சிட்டு நடிச்சாரோ என்னமோ! கதைய Comedy ஆ சொன்னனால திரைக்கதை விறுவிறுப்பா இருக்கு. இந்த மாதிரியான கதைசொல்லல் நம்மள உணர்ச்சிவசப்பட வைக்குமே தவிர ஆழமான புரிதல ஏற்படுத்தாது. (கதைசொல்லல் பத்தி பின்னாடி விரிவாக பாப்போம்).



ஆழமான புரிதலை ஏற்படுத்த முறையான Film Language அவசியம். அப்படி எடுக்கப்படுற படங்கள் தான்  பெரிய மாறுதல்களை கொண்டு வரும்.இதுவும் சமூக பிரச்சனைகளுக்காக எடுக்கப்பட்ட படம்தான் ஆனால் எடுத்த முறை தவறு.மக்களை உணர்ச்சிவசப்படுத்தி படம் எடுக்கிறதும் ஒரு வகையான வியாபாரம்தான். 

டேய் நீ Review பண்றனு இஷ்டத்துக்கு பேசாத படம் நல்லாதான் இருக்குனு நீங்க நினைக்கலாம், இனி வரக்கூடிய posts ல உங்களுக்கு நா சொல்றது கண்டிப்பா புரியும்.

நல்லா நோக்கத்திற்காக படம் எடுக்கப்பட்டிருக்கு, அதுக்காக ஒருவாட்டி பாக்கலாம் 

அடுத்த படத்தில் சந்திப்போம்..... 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

BEST FILMMAKING AND SCREENPLAY BOOKS Tamil

Paavakathaigal Movie Review Part 1

VAAZHL Movie Review By DIRECTION TAMIL

SOORARAI POTTRU Movie Tamil Review