SARPATTA MOVIE REVIEW
சார்பட்டா திரைப்பட விமர்சனம்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பகுதியில் சார்பட்டா படத்த பத்தி பாக்க போறோம்.
படத்தின் Oneline :
ரஞ்சித் சாரோட எல்லா படத்லையும் ஒரே Oneline-தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லா தகுதியும் திறமையும் இருக்கு அவங்க மேல வரணும் ஜெயிக்கணும் .
இந்த படத்தோட Oneline-உம் அதேதான். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரு ஒரு கருவிய USE பண்றாரு, Madras படத்துல எப்படி சுவர பண்ணாரோ அதே மாறி இந்த படத்துல BOXING-அ USE பண்ணிருக்காரு.
படத்தின் கதை :
இது ஒரு வரலாற்றையும் உண்மையும் தழுவிய படம். இப்டி இருக்குற படத்தோட கதைய சொல்லவே கூடாது, நீங்க கண்டிப்பா படம் பாத்து கதைய தெரிஞ்சிக்கோங்க.
படத்தின் POSITIVE விஷயங்கள் :
கண்டிப்பா படத்துல NEGATIVE விஷயங்களும் இருக்கு இந்த POSITIVE பகுதிய பாத்துட்டு அத பாக்கலாம்.
1. ஒரு நல்ல எழுத்தாளனை எப்படி கண்டுபிடிக்கலாம்னா அவங்க கதையில வர்ற எல்லா கதாபாத்திரத்தையும் சரியா எழுதிருப்பாங்க. நோக்கமே இல்லாம, அர்த்தமே இல்லாம அவங்க எந்த கதாபாத்திரத்தியும் அமைக்க மாட்டாங்க.
இந்த படம் ரஞ்சித் & பிரபா-ன்ற நல்ல எழுத்தாளர்கள் கையில் இருந்து வந்திருக்குனு படமே நமக்கு சொல்லிடுது.
2.ஒரு எழுத்தாளன் எழுதறது மட்டும் படத்தை சிறப்பா கொண்டுவந்துறாது, நல்ல நடிகர்கள்தான் அத சாத்தியப்படுத்தனும்.
இந்த படத்துல ஒருத்தர் விடாம சின்ன கதாபாத்திரத்தில இருந்து பெரிய கதாபாத்திரம் வரைக்கும் எல்லாருமே அத சாத்தியப்படுத்திருக்காங்க.
எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த படத்துல ஆண்கள் கதாபாத்திரத்த விட பெண்கள் கதாபாத்திரம் ரொம்ப வலுவா அமைஞ்சதுதான்.
3.இந்த படத்துல ரெண்டு பெரிய CHALLENGING-ஆனா விஷயங்கள் இருக்கு, ஒன்னு அந்த TIME PERIOD-அ அப்டியே கொண்டு வரணும். இன்னொன்னு அந்த BOXING-அ தத்ரூபமா கொண்டு வரணும்.
இது ரெண்டுமே சரியா கொண்டு வந்திருக்காங்க. இந்த படம் நல்ல இருக்குனு உங்களுக்கு தோண்றதுக்கு முக்கிய காரணமா இந்த ரெண்டு விஷயங்களும் இருக்கும்.
4.எல்லா படத்தலையும் சில கதாபாத்திரம் நம்ம மனசுல அதிக இடம் பிடிச்சிடும் . அந்த வகையில இந்த படத்துல வர DANCING ROSE & DADDY கதாபாத்திரங்கள் மனசுல அழுத்தமா நிக்குது.
DANCING ROSE IS A CRICKET DEVILLIERS.
5.இந்த படத்தோட MUSIC,ART WORK,DANCE CHOREO எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு HEADSET இல்லாம படம் பாக்காதீங்க, SOUNDS அவ்ளோ நல்லா இருக்கு . இந்த DEPARTMENTS எல்லாமே நம்மள EASY-ஆ படத்துக்குள்ளே TRAVEL பண்ண வைக்குது.
6.கடைசியா ரஞ்சித் சாரோட POLITICAL STAND ரொம்ப CLEAR-ஆ இருக்கும். இந்த படத்தலையும் அத நீங்க பாக்கலாம்.
படத்தின் NEGATIVE விஷயங்கள் :
எல்லா படத்துக்கும் NEGATIVES இருக்கும் இந்த படத்லையும் எனக்கு தோணுன விஷயங்கள சொல்ற.
1.படத்தோட LENGTH கொஞ்சம் அதிகமா இருந்துச்சி முக்கியமா ஆர்யா தப்பான பாதையில போற காட்சிகள் ரொம்ப நேரம் வந்த மாறி இருந்துச்சி. அத கொஞ்சம் கம்மி பண்ணிருக்கலாம்.
அவரு தப்பா போய்ட்டு இருக்காருன்ற விஷயம் நமக்கு வந்து சேந்துடுச்சி, அதுக்கு அப்புறமும் அது CONTINUE ஆனது கொஞ்சம் போரடிச்சிது.
2.இதுல கலை கதாபாத்திரத்தோட WIFE CHARECTER ரொம்ப நல்லா இருந்துச்சி, மத்த பெண்களோட கதாபாத்திரம் கொஞ்சம் சினிமா தன்மையோட இருந்துச்சி.
3.ஆர்யாவோட BOXING ABILITY மேல நம்பகத்தன்மை இல்லாம இருந்துச்சி, எடுத்த உடனே பெரிய BOXER-ஆனா DANCING ROSE-அ வீழ்த்தறது நம்பும்படியா இல்ல.
4.முன்னமே சொன்ன மாறி படத்தோட LENGTH அதிகமா இருந்ததால படத்தோட சுவாரசியம் கொஞ்சம் கம்மியா இருந்துச்சி.
OVERALL-ஆ படம் எடுக்கப்பட்ட விதம், எழுதப்பட்ட விதம், எடுக்கப்பட்ட நோக்கம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. கண்டிப்பா படம் பாக்காதவங்க உடனே பாருங்க.
முக்கியமா HEADSET போட்டு படம் பாருங்க.
NOTE : FOLLOW US ON YOUTUBE ALSO - DIRECTION TAMIL
Bro oru small doubt oru movie edukka evolo page ezhuthanum story
பதிலளிநீக்கு